ஊட்டியில் மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் மத்திய பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஊட்டி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் 90 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மத்திய பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நடைபெற்றது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து தொடங்கி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மாரியம்மன் கோவில் சந்திப்பு, மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் அணிவகுப்பு நடந்தது.
தொடர்ந்து காந்தல் முக்கோணத்தில் இருந்து பென்னட் மார்க்கெட் வழியாக ரோகிணி சந்திப்பு வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுத்து சென்றனர்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் கலந்துகொண்டனர். மத்திய பாதுகாப்பு படையினர் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story