சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளை கண்காணித்து பராமரிக்க அறிவுறுத்தல்
சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளை கண்காணித்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு முடிவுற்ற சாலை பணிகள், நடைபெறும் பணிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அண்ணங்காரம்பேட்டை முதல் தா.பழூர் வழியாக விளாங்குடி வரை செல்லும் சாலையை அவர் பார்வையிட்டார். மேலும் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் சாலையோரத்தில் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் இருபுறங்களிலும் நடப்பட்ட மரக் கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மரக்கன்றுகளை நல்ல முறையில் கண்காணித்து பராமரிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுத்தினார். ஆய்வின்போது அரியலூர் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story