செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்


செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 3 March 2021 1:23 AM IST (Updated: 3 March 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்

அலங்காநல்லூர்,மார்ச்
அலங்காநல்லூர் அருகே உள்ள பனங்காடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரை கட்டையால் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று ஒருவனை விரட்டிப் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவது தெரிய வந்தது. தப்பியோடிய ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story