ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
வாடிப்பட்டி,மார்ச்
வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை தாங்கினார். இதில் 13 விவசாயிகள் கலந்து கொண்டு 46 ஆயிரத்து 979 தேங்காய்களை 17 குவியல்களாக வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் 12 வியாபாரிகள் கலந்துகொண்டு அதிகபட்ச விலையாக ரூ.12.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8.80-க்கும், சராசரியாக ரூ.9.93-க்கும் தேங்காய்களை ஏலம் எடுத்தனர். அதற்குரிய பணம் உடனடியாக பெற்று விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story