சாத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனை


சாத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 3 March 2021 1:27 AM IST (Updated: 3 March 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

சாத்தூர்
சாத்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 
கண்காணிப்பு பணி 
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாத்தூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுைறகள் அமலில் உள்ளன. 
இதனால் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் முக்கிய சாலை சந்திப்புகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அலுவலர்  புஷ்பா தலைமையில், உதவி தேர்தல் அலுவலர்கள் சாத்தூர் தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜா ஹுசைன் ஆகியோர் மேற்பார்வையில் 3 நிலையான ஆய்வுக்குழு மற்றும் 3 பறக்கும் படை குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
வாகன சோதனை 
இந்தநிலையில் நிலையான ஆய்வுக்குழு மற்றும் பறக்கும் படை சோதனை குழு என்று  2 பிரிவுகள் சுழற்சி முறையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
அனுமதியின்றி பணம் மற்றும் நகைகள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதால் பாண்டி சங்கர், ராஜா, ரவீந்திரன், ஷாஜஹான் உள்ளிட்ட தாசில்தாாகள் தலைமையிலான குழுக்கள் சவுந்தரபாண்டியன், சுப்புராஜ், ஜவகர் உள்ளிட்ட சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சாத்தூர், சிவகாசி விளக்கு, இருக்கன்குடி ரோடு, சின்னக்காமன்பட்டி ரோடு, சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை, தாயில்பட்டி, மடத்துப்பட்டி விளக்கு, செவல்பட்டி விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story