41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என ேதர்தல் உதவி அலுவலர் கூறினார்.
காரியாபட்டி,
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 41 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என ேதர்தல் உதவி அலுவலர் கூறினார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான வேலைகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் உள்ள பொது இடங்களில் எழுதப்பட்டிருக்கும் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். திருச்சுழி சட்டமன்ற உதவி தேர்தல் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:-
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,20,720 வாக்காளர்கள் உள்ளனர்.
பதற்றமானவை
திருச்சுழி சட்டமன்ற தொகுதி ஆனது காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியதாகும். இங்குள்ள வாக்குச்சாவடிகளில் 41 சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story