வாக்குச்சாவடிகளில் கமிஷனர் ஆய்வு
வாக்குச்சாவடிகளில் கமிஷனர் ஆய்வு
சிவகாசி,
திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 15 பள்ளிகளில் 70-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டித்தாய் நேற்று காலை ஆய்வு செய்தார்.
திருத்தங்கல் எஸ்.ஆர்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆய்வின் போது அங்கு வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்விசிறி வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி சுகாதார அதிகாரி கந்தசாமி, ஆசீர்வாதம், பள்ளியின் தலைமையாசிரியர் நூர்ஜகான் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.
Related Tags :
Next Story