நெல்லிக்குப்பம் பகுதியில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணம் அபேஸ்


நெல்லிக்குப்பம் பகுதியில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணம் அபேஸ்
x
தினத்தந்தி 3 March 2021 1:57 AM IST (Updated: 3 March 2021 1:57 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் பகுதியில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை-பணத்தை திருடி சென்றுவிட்டனா்.

நெல்லிக்குப்பம்,
கடலூா் மாவட்டம்  பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் மனைவி சித்ரா (வயது 47). இவர் சம்பவத்தன்று பண்ருட்டிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு பஸ்சில் திரும்பி வந்தார். 

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பஸ் நிறுத்தம் வந்ததும் சித்ரா, தனது துணி பையில் இருந்த பர்சை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ, பர்சை அபேஸ் செய்து சென்றது தெரிந்தது. அந்த பர்சில் ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 கிராம் தங்க நகை இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் நஸ்ரின் பானு (29). இவர் சம்பவத்தன்று கடலூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு பஸ்சில் சென்றார். 

நெல்லிக்குப்பம் பேருந்து நிறுத்தம் வந்ததும், பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ, நஸ்ரின் பானுவின் கைப்பையில் இருந்த பர்சை அபேஸ் செய்து சென்று விட்டனர். அந்த பர்சில் ரூ.15 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.



Next Story