ஸ்ரீமுஷ்ணம் அருகே குரங்கு-நாய் குட்டியின் பாச போராட்டம்


ஸ்ரீமுஷ்ணம் அருகே குரங்கு-நாய் குட்டியின் பாச போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 2:11 AM IST (Updated: 3 March 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் அருகே குரங்கு-நாய் குட்டியுடன் பாச போராட்டத்தில் உள்ளது.

ஸ்ரீமுஷ்ணம், 

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் குளிரில் நடுங்கிய படி நாய் குட்டி ஒன்று கிடந்தது. கண்கள் கூட திறக்காத அந்த நாய் குட்டி பசியால் வாடி வந்தது. இந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த குரங்கு ஒன்று நாய் குட்டியை தனது குட்டிபோல் பாவித்து அங்கிருந்து தூக்கி சென்றது. 

தொடர்ந்து அதற்கு தன்னால் முடிந்த உணவை தேடி கொடுத்து தனது குழந்தை போன்று பார்த்து வருகிறது. கடந்த 10 நாட்களாக இதன் பாச போராட்டம் நடந்து வருகிறது. பொதுவாக குரங்கிற்கும் நாய்க்கும் ஆகவே ஆகாது என்பார்கள். ஆனால் இங்கு அதற்கு நேர் மாறாக இருந்து வருகிறது.

 தற்போது குரங்குக்கும் நாய்குட்டிக்குமான சிநேகம் அதிகரித்துவிட்டது என்றே கூறவேண்டும். குட்டியை தூக்கி கொஞ்சுவதும், அதற்கு பேன் பார்த்துவிட்டு சிரிப்பதும், யாராவது வந்தால் துாக்கிக்கொண்டு பாதுகாப்பான உயரத்திற்கு செல்வதுமாக இருக்கிறது. 

குரங்கிடம் இருந்து நாய் குட்டியை பிரிக்க அந்த பகுதிமக்கள் முயற்சி செய்தும் அதற்கு பலனளிக்கவில்லை. மனிதனுக்கு மனிதன் உதவாத காலத்தில், விலங்குகள் தங்களுக்குள் உள்ள பாசப்பிணைப்பை, உணர்த்தும்படியாக இந்த குரங்கு, நாய் குட்டியின் உறவு அமைந்துள்ளது.

 வாயில்லா ஜீவன்களின் இது போன்ற நிகழ்வுகள் நமக்கு பல பாடங்களையும், பாச உணர்வுகளையும் கற்றுத்தருகிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணமாகும். 

Next Story