தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பல் பொருட்கள் சேதம்
சீர்காழியில் தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது. பொருட்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாரதி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
சீர்காழி:
சீர்காழியில் தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது. பொருட்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பாரதி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட திருவந்தி கட்டளை தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது50) கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு தூங்கி் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட துரைராஜ் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
தொடர்ந்து தீ மளமளவென பரவி வீட்டின் முன்பகுதி எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆறுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி பாரதி எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரணம் வழங்கினார்.
அப்போது நகர செயலாளர் பக்கிரிசாமி, சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், பேரூர் கழக செயலாளர் போகர் ரவி, நகர பேரவை செயலாளர் மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story