புதிதாக விண்ணப்பித்த 81,469 பேருக்கு தயார் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது
திருச்சி மாவட்டத்தில் புதிதாக பதிவு செய்த 81,469 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை அவர்களது வீ்ட்டு முகவரிக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் புதிதாக பதிவு செய்த 81,469 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை அவர்களது வீ்ட்டு முகவரிக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
81,469 புதிய வாக்காளர்கள்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 23 லட்சத்து 32 ஆயிரத்து 886 ஆகும். இதில் 1.1.2021ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்ததால் புதிய வாக்காளர்களாக தங்களை சேர்த்து வாக்காளர் அடையாள அட்டை வழங்கும்படி கேட்டு விண்ணப்பம் செய்த 81,469 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது புதிய வாக்காளர்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தபால் மூலம் அனுப்பும் பணி
தற்போது அவற்றை விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு தபால் நிலையங்கள் மூலம் அனுப்பும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஒரு வார காலத்திற்குள் இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story