நெல்லை அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு


நெல்லை அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 March 2021 2:20 AM IST (Updated: 3 March 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடந்தது.

நெல்லை, மார்ச்:
தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுபோடுவதை வலியுறுத்தும் வகையில் நெல்லை அருகே தாழையூத்தில் துணை ராணுவத்தினர் நேற்று அணிவகுப்பு நடத்தினர்.

அணிவகுப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கினார். மேல தாழையூத்தில் இருந்து தொடங்கி தென்கலம் விலக்கு, சங்கர் நகர் பாலம், 9-ம் நம்பர் பஸ் நிறுத்தம், ராஜவல்லி புரம் ரெயில்வே கேட் வழியாக வந்து தாழையூத்து பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.

மேலும் இதேபோல் கொடி அனுவகுப்பு மானூர் யூனியன் அலுவலகத்தில் தொடங்கி மானூர் பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மானூர் பஸ் நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் நெல்லை ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு அர்ச்சனா, எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி நரேந்திரன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, மானூர் இன்ஸ்பெக்டர் ராமர், அஸ்சாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 64 பேர், மற்றும் 40 உள்ளூர் போலீசார் உட்பட 104 பேர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகரம்

இதே போல் நெல்லை மாநகரில் நேற்று மாலை துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பாளையங்கோட்டை ராமர் கோவில் முன்பு இருந்து அணிவகுப்பு தொடங்கியது. இந்த அணிவகுப்பு ராஜகோபாலசுவாமி கோவில், மார்க்கெட், சமாதானபுரம் வழியாக திருச்செந்தூர் ரோடு வரை சென்று முடிவடைந்தது.
இதேபோல் நாங்குநேரியில் துணை சூப்பிரண்டு லிசா ஸ்டெல்லா தெரஸ் தலைமையிலும் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

Next Story