தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பொதுமக்கள்


தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 March 2021 2:30 AM IST (Updated: 3 March 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழவூர் அருகே தேர்தலை புறக்கணித்து வீடுகளில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றினர்.

வடக்கன்குளம், மார்ச்:
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே செட்டிகுளம் புதுமனை மற்றும் இந்திரா காலணியில் இரு பிரிவினர்கள் தனித்தனியாக வசிக்கின்றனர். அதில் ஒரு பிரிவினர் குடியிருக்கும் பகுதிகளில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த வாலிபர்கள் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் இரு பிரிவினர்ளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக  கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்து ஒரு பிரிவைச் சேர்ந்த 5 பேர் தாக்கப்பட்டதுடன் 8 வீடுகள் சூறையாடப்பட்டதுடன்,  10 மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் அரசு தரப்பிலும் அரசியல்வாதிகளும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த இந்திரா காலணி மக்கள், பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கிராம நுழைவு வாயலில் சுவரொட்டியும் ஒட்டியுள்ளனர். ‘ யாரும் ஓட்டுக்கேட்டு ஊருக்குள் வராதீர்’ என அதில் குறிப்பிட்டு உள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story