போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் 51 பேர் கைது


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் 51 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2021 2:57 AM IST (Updated: 3 March 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் 51 பேர் கைதானார்கள்.

கோவை

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரை பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை செயலாளர் சுதாசுந்தர்ராமன், மாநில தலைவர் வாலன்டினா, மாநில பொது செயலாளர் சுகந்தி, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மற்றும் பிரமிளா, என்.அமிர்தம், ராதிகா உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட மாதர் சங்கத்தினர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் கைது செய்தனர். 


Next Story