கலவை அருகே, கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தகராறில் பெண்கொலை


கலவை அருகே, கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தகராறில் பெண்கொலை
x
தினத்தந்தி 3 March 2021 3:05 AM IST (Updated: 3 March 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தகராறில் பெண்கொலை செய்யப்பட்டார்.

கலவை,

கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் பிரபாகரன் (வயது 32). இவரது மனைவி ஜீவிதா. இவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருடைய குடும்பத்திற்கு 2015-ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் கடனாக கொடுத்துள்ளனர்.

அந்த பணத்தை பிரபாகரன், அவரது மனைவி ஜீவிதா ஆகியோர் லட்சுமணனிடம் பலமுறை கேட்டுள்ளனபர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் தந்தை பழனி, லட்சுமணனிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது லட்சுமணனின் தம்பி ரமேஷ் என்பவருடைய மனைவி ஐஸ்வர்யா, பழனியை அசிங்கமாக பேசி கன்னத்தில் அடித்துள்ளார். அருகே இருந்த பிரபாகரன், ஜீவிதா ஆகியோர் சண்டையை தடுத்துள்ளனர். அப்போது ஐஸ்வர்யா, ஜீவிதாவின் மார்பில்  உதைத்து, லட்சுமணன், பிரபாகரனை கட்டையால் அடித்துள்ளார்.

இதில் காயம் அடைந்த 3 பேரும் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு ஜீவிதா இறந்துவிட்டார்.

இதுகுறித்து பிரபாகரன் கலவை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஐஸ்வர்யா, லட்சுமணன், அவருடைய சகோதரர்கள் ராமன், ஆனந்தன் ஆகிய 4 பேயும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

Next Story