புளியரையில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது


புளியரையில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 3 March 2021 3:18 AM IST (Updated: 3 March 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

புளியரையில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.

செங்கோட்டை, மார்ச்:
புளியரை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.

வாகன ேசாதனை

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி செங்கோட்டை அருகே உள்ள தமிழக- கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் ஒருகார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் வந்தவர்களிடம் ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமண வீட்டுக்கு செல்வதாகவும், திருமண செலவுக்காக பணம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். பின்னர் அதற்குரிய ஆவணங்களை காட்டியதும் பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

45 சோதனை சாவடிகள்

புளியரை சோதனை சாவடிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சமீரன் நேற்று திடீரென்று வந்தார். அங்கு வாகன சோதனையை முடுக்கி விட்டார். அவர் முன்னிலையில் சில வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், செங்கோட்டை தாசில்தார் ரோஷன்பேகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் கலெக்டர் சமீரன் கூறுகையில், “மாவட்டம் முழுவதும் 45 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

ரேஷன் அரிசி பறிமுதல்

நேற்று சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த பகுதியில் ஒருகார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். 
அந்த காருக்குள் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. காரில் இருந்தவரிடம் விசாரித்தபோது, கேரளாவுக்கு அந்த ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த கேரளா மாநிலம் கோனி ஊரைச்சேர்ந்த ராஜன் (வயது 56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story