கிணத்துக்கடவில் பரிதாபம் மூளைக்காய்ச்சலுக்கு 10 ம் வகுப்பு மாணவர் பலி


கிணத்துக்கடவில் பரிதாபம் மூளைக்காய்ச்சலுக்கு 10 ம் வகுப்பு மாணவர் பலி
x
தினத்தந்தி 3 March 2021 3:33 AM IST (Updated: 3 March 2021 3:39 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் அரசு பள்ளி 10 ம் வகுப்பு மாணவர் மூளைக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர்கள் 5 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி மணிகண்டபுரத்தை சேர்ந்தவர் மாசாணம். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரஞ்சித் (வயது 15). இவர், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. உடனே அவரை கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பிறகும் அவருக்கு காய்ச்சல் தீவிரமானதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இதையடுத்து அவர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவன் ரஞ்சித் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ரஞ்சித்தின் உடலை பரிசோதனை செய்ததில் மூளை காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரிவிக்கப்பட் டது. உடனே வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் டாக்டர் தீலிப்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 406 மாணவ -மாணவிகளுக்கு சளி, காய்ச்சல் பரிசோதனை செய்தனர். அதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை.

இதையடுத்து அந்த பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி மற்றும் புகை மருந்துகள் அடிக்கப்பட்டது. அதேபோல் மணிகண்டபுரத்தில் உள்ள மாணவனின் வீடு இருக்கும் பகுதியில் நோய் தடுப்பு பணிகளை சுகாதார பணியாளர்கள் செய்தனர். அதை மாவட்ட மலேரியா அலுவலர் முருகப்பா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். மூளைக்காய்ச்சல் பாதிப்பால் மாணவன் ரஞ்சித் இறந்ததால் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 20 பேருக்கு நோய்த்தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட் டன. மாணவனின் பெற்றோர் உள்பட 5 பேரிடம் ரத்தமாதிரிகள் எடுக்கப் பட்டு ஆய்வுக்கு ஓசூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story