வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது


வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது
x
தினத்தந்தி 3 March 2021 3:59 AM IST (Updated: 3 March 2021 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஓமலூர்:
ஓமலூர் அருகே வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வழிப்பறி வழக்கு
ஓமலூர் அருகே பூசாரிப்பட்டி மேம்பாலம் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவில் இருந்து சேலத்தை நோக்கி வந்த லாரியை வழி மறித்து 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து லாரி டிரைவர் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த சாகர் (வயது 32) என்பவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். 
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, கதிர்வேல், மஸ்தான் அலி ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்பான வழக்கு ஓமலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜாமீனில் வந்த மஸ்தான் அலி கடந்த 2014-ம் ஆண்டு வரை கோர்ட்டில் ஆஜராகி வந்தார். அதன்பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். 
கைது
கடந்த 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மஸ்தான் அலியை கைது செய்ய ஓமலூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் மேற்பார்வையில் தீவட்டிப்பட்டி போலீசார் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மஸ்தான் அலியை கைது செய்தனர். 
பின்னர் அவர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Next Story