வாழப்பாடியில் யானை தந்தங்களை கடத்திய 3 பேர் கைது


வாழப்பாடியில் யானை தந்தங்களை கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2021 4:03 AM IST (Updated: 3 March 2021 4:03 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் யானை தந்தங்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாழப்பாடி:
வாழப்பாடியில் யானை தந்தங்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல்
வாழப்பாடி பகுதியில், வேனில் மறைத்து வைத்து யானை தந்தங்களை சிலர் கடத்தி செல்வதாக, சென்னை மண்டல வனவிலங்கு குற்றத்தடுப்பு தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை மண்டல வனவிலங்கு குற்றத்தடுப்பு நுண்ணறிவு தனிப்பிரிவு துணை இயக்குனர் கிருபாசங்கர் உத்தரவின் பேரில் மண்டல ஆய்வாளர் மதிவாணன் தலைமையிலான தனிப்பிரிவினர், சேலம் மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து வாழப்பாடி பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வாழப்பாடி பஸ் நிலையம் அருகே சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 2 யானை தந்தங்கள் இருந்தன. 
3 பேர் கைது
இதையடுத்து அதிகாரிகள் வேனில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வாழப்பாடி அருகே உள்ள பெரிய விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கமணி (வயது 50), பெரியக்குட்டி மடிவு கிராமத்தை சேர்ந்த ராமர் (27), கந்தசாமி (30) ஆகியோர் என்பதும், இவர்கள் யானை தந்தங்களை கடத்திச்சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் யானை தந்தங்களை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story