கெங்கவல்லியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு
கெங்கவல்லியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கெங்கவல்லி:
கெங்கவல்லியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிலைகள் திறப்பு
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கெங்கவல்லி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மூடப்பட்டன.
இதையடுத்து திடீரென்று நேற்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மட்டும் திறக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் அதன் அருகே உள்ள அண்ணா, கலைஞர் சிலை மூடப்பட்டு இருந்த நிலையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் மட்டும் திறக்கப்பட்டதால், அனைத்து கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மூடப்படும்
இதையடுத்து கெங்கவல்லி தேர்தல் அதிகாரி வெங்கடேசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2 சிலைகளும் உடனடியாக மூடப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story