இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி


இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 3 March 2021 4:16 AM IST (Updated: 3 March 2021 4:16 AM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார்.

இளம்பிள்ளை:
இளம்பிள்ளையில் மர்ம காய்ச்சலுக்கு தொழிலாளி பலியானார்.
மர்ம காய்ச்சல்
பீகார் மாநிலம் நவதா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் யாதவ் (வயது 32). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. சந்தோஷ்குமார் யாதவ் இளம்பிள்ளை பகுதியில் ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென அவருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
முற்றுகை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் யாதவ்  இறந்துவிட்டார். இதையறிந்த இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை இளம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது பற்றி தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, கிராம நிர்வாக அலுவலர் சுமதி ஆகியோர் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் சந்தோஷ் குமார் யாதவ் 10 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் மருத்துவ உதவிக்கு பணம் கேட்டு போது அந்த டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. அவரை இழந்து வாடும், குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரினர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story