ஓட்டுப்போட வசதியாக தபால் நிலையங்களில் ரூ 292 செலுத்தி அடையாள அட்டை பெறலாம்


ஓட்டுப்போட வசதியாக தபால் நிலையங்களில் ரூ 292 செலுத்தி அடையாள அட்டை பெறலாம்
x
தினத்தந்தி 3 March 2021 4:36 AM IST (Updated: 3 March 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டுப்போட வசதியாகதபால் நிலையங்களில் ரூ.292 செலுத்தி அடையாள அட்டை பெறலாம் என அதிகாரி தெரிவித்தார்.

பொள்ளாச்சி,

தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு கடிதங்கள், பார்சல் பட்டுவாடா மட்டுமின்றி, சேமிப்பு திட்டங்களிலும் சில சேவைகள் செயல்படுத்தப்படுகிறது. 

இந்தநிலையில் தேர்தலில் ஓட்டுப்போட தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டு உள்ள பல்வேறு ஆவணங்களில் தபால் நிலைய அடையாள அட்டையும் சேர்க்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி புதிதாக அஞ்சலக அடையாள அட்டை வினியோகத்தை தபால் துறை தொடங்கி உள்ளது.  இதற்கு விண்ணப்ப கட்டணமாக, ரூ.20, அடையாள அட்டை கட்டணமாக ரூ.250, பதிவு தபால் வழியாக பெற ரூ.22 என, மொத்தமாக ரூ.292-யை, கணினிமயமாக்கப்பட்ட தபால் நிலையத்தில் செலுத்த வேண்டும்.

 இத்துடன், விண்ணப்ப படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தால், அஞ்சலக அடையாள அட்டை வீடு தேடி வரும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் மேற்கொள்ள, ஓட்டுப்போட முக்கிய சான்றாக தனிநபர் அஞ்சல் அடையாள அட்டையை பயன்படுத்தலாம். 

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பொள்ளாச்சி கோட்ட தபால் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story