கயத்தாறில் பொக்லைன் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கயத்தாறில் பொக்லைன் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 4:15 PM IST (Updated: 3 March 2021 4:15 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் பொக்லைன் ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கயத்தாறு:

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். டீசல் விலை உயர்வால் பொக்லைன் எந்திரங்களின் வாடகை கட்டணத்தை உயர்த்தும் நிலை உள்ளது. 

எனவே டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கயத்தாறில் பொக்லைன் உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கயத்தாறு புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story