தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை விவரம்


தூத்துக்குடி மாவட்டத்தில்  வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை விவரம்
x
தினத்தந்தி 3 March 2021 4:22 PM IST (Updated: 3 March 2021 4:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விலை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.883.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.882 ஆகவும், கழுகுமலையில் ரூ.890.50 ஆகவும், கயத்தாறில் ரூ.893.50 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.882 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.900.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.883.50 ஆகவும், ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.884 ஆகவும் மற்றும் குளத்தூரில் ரூ.884.50 எனவும், 

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.883.50 எனவும் கடந்த 1-ந் தேதி முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதிக பணம்

எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கு மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


Next Story