வேலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு


வேலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு
x
தினத்தந்தி 3 March 2021 7:25 PM IST (Updated: 3 March 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

குடியாத்தம்

வாக்கு எண்ணும் மையம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் குடியாத்தம் காந்திநகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதற்காக ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு

குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும், காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை காட்பாடி சட்டக் கல்லூரியிலும், வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதி வாக்கு எண்ணிக்கை வேலூர் தந்தைபெரியார் பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது.

இந்த தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு மூன்று அடுக்காக கண்காணிக்கப்படும். மைக்ரோ  பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிப்பது, துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story