வாகன சோதனையின் போது காரில் கொண்டு செல்லப்பட்ட பரிசு பொருட்கள் பறிமுதல்


வாகன சோதனையின் போது  காரில் கொண்டு செல்லப்பட்ட பரிசு பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2021 10:38 PM IST (Updated: 3 March 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே படியூரில் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பரிசுபொருட்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கேயம்
காங்கேயம் அருகே படியூரில் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட  பரிசுபொருட்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே படியூரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நேற்று காலை 9 மணியளவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். 
அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படம் பொறிக்கப்பட்ட 15 பைகளை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு பையிலும் ஒரு புடவை, கம்பளிப் போர்வை, ஒரு எவர்சில்வர் தட்டு ஆகியன இருந்தது தெரிய வந்தது. 
பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட இந்த 15 பைகளையும் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story