க.பரமத்தி அருகே ரூ.2 லட்சம் சிக்கியது
கரூரில் ரூ.2 லட்சம் சிக்கியது
க.பரமத்தி
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள முன்னூர் என்ற இடத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழுவினர் முருகன் தலைமையில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, க.பரமத்தியில் இருந்து நொய்யல் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் தென்னிலை அருகே விஜயநகரத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 52), க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதபட்டியை சேர்ந்த சுப்பிரமணி (55), சின்னதாதம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (57), தென்னிலை பொன்நீலியம்மன் நகரை சேர்ந்த கார் டிரைவர் வடிவேல் (45) ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் சோதனை மேற்கொண்டபோது, ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 300 இருந்தது. அந்த பணம் குறித்து கேட்டதற்கு சேலம் மாவட்டம், மேச்சேரியில் ஆடுகள் வாங்குவதற்காக கொண்டு செல்கிறோம் என்று கூறினர். ஆனால், பணம் கொண்டு செல்வதற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரவக்குறிச்சி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story