குடியிருப்பு அருகே திடீர் தீ விபத்து
குடியிருப்பு அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நொய்யல்
உப்புப்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே உள்ள தோட்டத்தில் ஏராளமான பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்திருந்தன. இந்நிலையில் அந்த காய்ந்த செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி அருகிலிருந்த வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
Related Tags :
Next Story