தர்ப்பூசணி பழம் விற்பனை மும்முரம்


தர்ப்பூசணி பழம் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 4 March 2021 1:03 AM IST (Updated: 4 March 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

தளவாய்புரம் பகுதியில் தர்ப்பூசணி பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தளவாய்புரம், 
தளவாய்புரம் பகுதியில் தர்ப்பூசணி பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
வெயிலின் தாக்கம் 
தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 
இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். இந்தநிலையில் கோடைகால வெயிலிலிருந்து தங்களின் உடலை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள குளிர்பானங்கள், கம்மங்கஞ்சி, கேப்பை கூழ், கரும்புச்சாறு ஆகியவற்றை வாங்கிப் பருகி வருகின்றனர். 
தர்ப்பூசணி பழம் 
இதனையடுத்து தற்போது இங்கு தர்ப்பூசணி பழமும் விற்பனைக்கு வந்துள்ளது. 
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தர்ப்பூசணி பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பழம் தற்போது மதுரையில் இருந்து லாரி மூலம் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
 கிலோ ரூ.18
இங்கு லாரி மூலம் வருகிறது. தற்போது கிலோ ரூ.18-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தான் இந்த பழத்தின் வரத்து தொடங்கியுள்ளது. 
இன்னும் சில நாட்களில் பழத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது கோடை காலம் முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் இந்த தர்ப்பூசணி பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
 இவ்வாறு அவர் கூறினார்.

Next Story