தொழிலாளி மர்ம சாவு


தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 4 March 2021 1:09 AM IST (Updated: 4 March 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி மர்ம சாவு

சாத்தூர்,
சிவகங்கை மாவட்டம் பாலாவயல் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஆலப்பன் (வயது53). தொழிலாளியான இவர் சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டியில் உள்ள அட்டை கம்பெனியில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு அறைக்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வேலைக்கு செல்லாததால் தங்கியிருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது ஆலப்பன் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சோதித்து பார்த்த போது அவர் இறந்துவிட்டதாக கூறினர். இந்தநிலையில் தனது கணவன் சாவில் மர்மம்  இருப்பதாக .அவரது மனைவி சித்ரா (42) சாத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story