திருப்பூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
திருப்பூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
திருப்பூர்:-
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையிலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தியும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நேற்று திருப்பூரில் நடைபெற்றது. மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) நேற்று குமரன் சிலையில் இருந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். இதனை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.
குமரன் ரோடு, மாநகராட்சி, பழைய பஸ் நிலையம் வழியாக காங்கேயம் ரோடு, சி.டி.சி. கார்னரில் இந்த அணிவகுப்பு முடிவடைந்தது. இதில் 71 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட மாநகர போலீசாரையும் சேர்த்து 570 பேர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story