பயிற்சி முகாம்


பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 4 March 2021 1:24 AM IST (Updated: 4 March 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி முகாம்

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில் கல்லூரி உள் தர மதிப்பீட்டு குழு, திருச்சுழி ஸ்பீச் நிறுவனத்துடன் இணைந்து காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சங்கரசேகரன் முன்னிலை வகித்தார். முதல்வர் முத்துச்செல்வன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் தனுசுபா வரவேற்றார். அருப்புக்கோட்டை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மண்டல ஆராய்ச்சி நிலைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் மாரீஸ்வரி தொழில்முனைவோருக்கு காளான் வளர்ப்பின் மூலம் வருமானம் ஈட்டுவது குறித்து சிறப்புரையாற்றி பயிற்சி அளித்தார். பயிற்சியில் திருச்சுழியை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின் பெரியநாயகம் நன்றி கூறினார்.

Next Story