4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 4 March 2021 1:28 AM IST (Updated: 4 March 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை, மார்ச்:
பாளையங்கோட்டை திருஞானசம்பந்தர் நயினார் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது24), நடுவக்குறிச்சி வாகைகுளம் மாரிமுத்து என்ற சுசி மாரிமுத்து (27), பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் மேல தெருவைச் சேர்ந்த அருணாசல செந்தில்குமார் என்ற அருண் (19), மேலப்பாளையம் குறிச்சி நாகம்மாள்புரத்தை சேர்ந்த அம்மு வெங்கடேஷ் (21) ஆகியோர் மீது நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன.
இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரக்ஷிதா ஆகியோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதனை போலீஸ் கமிஷனர் அன்பு ஏற்று மணிகண்டன், மாரிமுத்து, அருண், அம்மு வெங்கடேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் நெல்லை சந்திப்பு போலீசார் வழங்கினார்கள்.

Next Story