இ்ந்து மக்கள் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும்- அர்ஜூன் சம்பத் பேட்டி
சட்டசபை தேர்தலில் இந்து மக்கள் கட்சி 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
நெல்லை, மார்ச்:
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று நெல்லையில் அந்த கட்சியின் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு வாங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் இந்து மக்கள் கட்சியில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் விருப்பமனு வாங்கும் பணி நடந்து வருகிறது. 180 தொகுதிகளில் போட்டியிட 213 பேர் இதுவரை விருப்ப மனு கொடுத்துள்ளனர். 10-ந் தேதி வரை மனுக்கள் வாங்கப்படுகிறது. 11-ந் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்து மக்கள் கட்சி இந்துக்களின் ஒற்றுமை ஆன்மீக அரசியல், இந்துக்களின் ஓட்டுரிமை ஆகியவற்றை வைத்து பிரசாரம் செய்யும். பாரதீய ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு நாங்கள் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம். அவர்கள் கூட்டணியில் எங்களை சேர்த்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம். இல்லையெனில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவோம். ராகுல்காந்தி பிரசாரத்தில் கிறிஸ்தவ நிறுவனங்களை தான் பயன்படுத்தியுள்ளார். மேலும் நெல்லையப்பர் கோவிலில் அவருடைய பாதுகாப்பாளர்கள் செருப்பணிந்து வந்தது கண்டனத்துக்கு உரியதாகும். தமிழ்நாடு முழுவதும் கோவில் திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன், இளைஞரணி தலைவர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story