புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 March 2021 1:42 AM IST (Updated: 4 March 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் தேரோட்டம்
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி, மார்ச்.4-
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 1-ந்தேதி மறு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காளியாவட்டம் நிகழ்ச்சியையொட்டி பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு அம்மனை உய்ய கொண்டான் வாய்க்கால் கரையில் இருந்து புத்தூர் மந்தைக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை சுத்த பூஜை நடந்தது. அதன் பின்னர் அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று(வியாழக்கிழமை) காலை புத்தூர் மந்தையில் நடைபெற உள்ளது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கும் ஆட்டு குட்டிகளின் ரத்தத்தை சாமி அருள் பெற்ற மருளாளி உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்குகிறார். குழுமாயி கோவில் திருவிழாவையொட்டி புத்தூர் பகுதி முழுவதும் விழா கோலம் பூண்டு உள்ளது.

Next Story