தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம்- கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
நெல்லையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை, மார்ச்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு படக்காட்சி வாகனம் மூலம் தேர்தல் பிரசாரம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. அதை கலக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பயிற்சி கலெக்டர் மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story