கடலூா் மாவட்டத்தில் 40 ரவுடிகள் கைது
கடலூர் மாவட்டத்தில் மேலும் 40 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் பணிகளை செய்து வருகிறது.
இதற்கிடையில் தேர்தலின் போது பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 50 ரவுடிகள், அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பழைய குற்றவாளிகள், குறிப்பாக கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.
40 ரவுடிகள் கைது
அதன்படி மாவட்டம் முழுவதும் 7 உட்கோட்டங்களில் உள்ள போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, ரவுடிகளை கைது செய்தனர். அதன்படி பெரியக்குப்பம் புகழ், ரஜினிவளவன், முத்தாண்டிக்குப்பம் எழிலரசன், சுப்பிரமணியன், கரும்பூர் ஸ்ரீதரன் உள்பட 40 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story