நிலத்தரகர் கொலையில் 4 பேர் கைது


நிலத்தரகர் கொலையில் 4 பேர் கைது
x

நெல்லை அருகே நிலத்தரகர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, மார்ச்:
நெல்லை அருகே நிலத்தரகர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிலத்தரகர் கொலை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் இந்திரா நகரில் வசித்தவர் ராஜா (வயது 50). நிலத்தரகரான இவர் கடந்த மாதம் 28-ந்தேதி பாளையங்கோட்டை பர்கிட் மாநரை அடுத்த பானுநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜாவின் உறவினர்களே அவரை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது.

உறவினர்கள் 4 பேர் கைது

இதுதொடர்பாக ராஜாவின் உறவினர்களான பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியைச் சேர்ந்த கல்லத்தியான் (27), மகேந்திரன் (40), செந்தூர் (22), கனகராஜ் (31) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் ராஜா கொலை வழக்கில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story