குனியமுத்தூரில் திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதுமாப்பிள்ளை கைது


குனியமுத்தூரில் திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதுமாப்பிள்ளை கைது
x
தினத்தந்தி 9 March 2021 4:46 AM GMT (Updated: 9 March 2021 4:46 AM GMT)

கோவை குனியமுத்தூரில் திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

போத்தனூர்

கோவை குனியமுத்தூரில் திருமணம் செய்ய வற்புறுத்தி இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுப்பட்டதாவது:-

கொலை மிரட்டல்

கோவையை அடுத்த குனியமுத்தூர் சுகுணாபுரத்தை சேர்ந்தவர் சர்புதீன் (வயது 21).  இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் அந்த பகுதியில் 19 வயது இளம்பெண் தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வருகிறார். 

இளம்பெண்ணின் தாயும், அவருடைய சகோதரனும் வேலைக்கு சென்றுவிடுவதால், அந்த இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பயன்படுத்திக்கொண்ட சர்புதீன், இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று நீயும், நானும் சேர்ந்து வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் தனியாக இருந்தபோது, வீட்டிற்கு வந்த சர்புதீன் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சர்புதீன், இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

புதுமாப்பிள்ளை கைது

இந்த சம்பவம் குறித்து இளம்பெண் அழுது கொண்டே தனது தாய் மற்றும் சகோதரனிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார்  அளித்தனர். 

இந்த புகாரில் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக சர்புதீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 கோவையில் திருமணம் செய்ய வற்புறுத்தி  இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story