நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது


நெல்லையில்  குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 March 2021 1:39 AM IST (Updated: 10 March 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த வடக்கு அரியநாயகிபுரம் வாணிப தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). இவர் மீது கொலை முயற்சி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில் அய்யப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

இதையடுத்து முக்கூடல் போலீசார், அய்யப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story