இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.4¼ லட்சம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.4¼ லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.4¼ லட்சத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
சட்டமன்ற ேதர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பறக்கும் படையினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.4¼ லட்சம் பறிமுதல்
அப்போது அழகாபுரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் பல்க் ஊழியர் பார்த்தீபன் வந்துள்ளார்.
அவரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ. 4 லட்சத்து 39 ஆயிரம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பெட்ரோல் பல்க் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
ஆனால் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story