முப்பிடாதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை


முப்பிடாதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 10 March 2021 1:54 AM IST (Updated: 10 March 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் முப்பிடாதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

முக்கூடல்:

முக்கூடல் ஆலடி அம்மன், முப்பிடாதி அம்மன் கோவில்களில் சிவராத்திரி கொடை விழா 3 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு  திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு வில்லுணி சாஸ்தா கோவில் பூஜை, 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து கும்ப தீர்த்தம், குடி அழைப்பு, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, கும்பம் ஏற்றுதல், சிறப்பு பூஜை, 9 மணிக்கு அலங்கார சப்பரத்தில் அம்மன் ரத வீதி பவனி வருதல் நடக்கிறது.
 
நாளை (வியாழக்கிழமை) காலை தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் ஊர்வலம், பகல் 12 மணிக்கு மேல் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுடலைமாடசாமி மகுடத்துடன் அழைத்து வருதல், 1 மணிக்கு மதிய கொடை, சிறப்பு பூஜை, மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் மற்றும் காணிக்கைகள் செலுத்தும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

இரவு 8 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

Next Story