குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 10 March 2021 1:55 AM IST (Updated: 10 March 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ெதரிவித்தனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு ெதரிவித்தனர். 
குப்பை கிடங்கு 
 ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு 60 அடி சாலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு ராஜபாளையம் நகராட்சி சார்பில் எந்திரம் மூலம் இடத்தை துப்புரவு செய்யும் பணி தொடங்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மறியலில் ஈடுபட வந்தனர். 
அப்போது அவர்கள் காலங்காலமாக விவசாயிகள் நெல் களமாக பயன்படுத்தி வந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததுடன், மக்கள் தொகை மிகுந்த இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என கூறினர்.  
பேச்சுவார்த்தை 
இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
உங்களின் பிரச்சினைகள் குறித்து  நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story