வாகன சோதனையில் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
வாகன சோதனையில் ரூ.1¾ லட்சம் பறிமுதல்
மதுரை, மார்ச்.
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
பறக்கும் படையினர் சோதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு தொகுதியிலும் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் அதிகாரிகள் பறக்கும்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரபாஞ்சான் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அந்தக் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1¼ லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
53 ஆயிரம்
அதே போன்று மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட புதுதாமரைப்பட்டியில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்த பிரவீன்ராஜா என்பவரிடம் உரிய ஆவணமின்றி ரூ.53 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story