முசிறி காவிரி ஆற்றங்கரையில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு


முசிறி காவிரி ஆற்றங்கரையில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 10 March 2021 2:36 AM IST (Updated: 10 March 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

முசிறி காவிரி ஆற்றங்கரையில் நாயக்கர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

முசிறி, 

முசிறி பரிசல்துறை காவிரி ஆற்றின் அருகே உள்ள அழகுநாச்சியம்மன் கோவில் முன் ஒரு நடுகல் அமைந்துள்ளது. அந்த நடுகல்லில் எழுத்து பொறிப்புகள் உள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு கூறும்போது, கல்வெட்டில் பிரமிக்கி நாயக்கர் வத்திரக்கூடையார் என்பவர் அழகுநாச்சியம்மனுக்கு தேவதானமாக நிலம் கொடுத்துள்ளார். மேலும் இந்தநிலத்தை அபகரித்தாலோ அல்லது ஊறுவிளைவித்தாலோ அவர்கள் கங்கைகரையில் காராம்பசுவையும், பிராமணரையும் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி.18-ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால கல்வெட்டாகும் என்றார்.

Next Story