துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூலித்தொழிலாளிக்கு எலும்பை இணைக்கும் அறுவை சிகிச்சை 6 மணி நேரம் நடந்தது


துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூலித்தொழிலாளிக்கு எலும்பை இணைக்கும் அறுவை சிகிச்சை 6 மணி நேரம் நடந்தது
x
தினத்தந்தி 10 March 2021 2:39 AM IST (Updated: 10 March 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் கூலித்தொழிலாளிக்கு எலும்பை இணைக்கும் அறுவை சிகிச்சை 6 மணி நேரம் நடந்தது

துவரங்குறிச்சி, 
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த எம்.இடையபட்டி அருகே உள்ள வடகம் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சரவணனுக்கு வலது முழங்கால் மூட்டு மற்றும் தொடை எலும்பு சுக்கு நூறாக உடைந்தது. இதற்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

இந்தநிலையில் தற்போது, தொடை எலும்பு மற்றும் மூட்டில் சீழ் பிடித்தது. இதனால் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் ஜான் விஸ்வநாத் அவருக்கு 5 பெரிய அறுவை சிகிச்சைகளை கடந்த 3 மாதங்களில் செய்து எலிசரோ ரிங் பிக்ஸேட்டர் என்கிற நவீன எலும்பு வளர்சிகிச்சை முறை மூலம் எலும்பை வளர செய்ததுடன் நோய் தொற்றையும் குணமாக்கினார். 5 பெரிய அறுவை சிகிச்சை செய்து நோய் தொற்று சரியானவுடன் சரவணனிற்கு தொடை எலும்பை இணைக்கும் அறுவை சிகிச்சை ‘டூவல் லாக்கிங் கம்ரஷன் பிளேட்’ மூலம் செய்யபட்டது. இந்த அறுவை சிகிச்சை 6 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்றது. இதுபோன்ற சிக்கலான, சவாலான அறுவை சிகிச்சைகளை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகளுக்கு அடிப்படை வசதியே இல்லாத துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் செய்திருப்பதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story