அரசு பஸ்சை பயணிகளே தள்ளி ‘ஸ்டாா்ட்’ செய்யும் அவலம்


அரசு பஸ்சை பயணிகளே தள்ளி ‘ஸ்டாா்ட்’ செய்யும் அவலம்
x
தினத்தந்தி 10 March 2021 2:40 AM IST (Updated: 10 March 2021 2:40 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சை பயணிகளே தள்ளி ‘ஸ்டாா்ட்’ செய்யும் அவலம்

காட்டுப்புத்தூர்,

காட்டுப்புத்தூரில் இருந்து நாமக்கல்லுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் அரசு டவுன்பஸ் ஒன்று தினமும் நாமக்கல்லில் இருந்து புறப்பட்டு இரவு காட்டுப்புத்தூர் வரும். பின்னர், மறுநாள் காலை 7 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் செல்லும். அவ்வாறு காட்டுப்புத்தூரில் புறப்படும் போது, பஸ் உடனே ‘ஸ்டார்ட்’ ஆவதில்லை. இதனால் பயணிகள், பஸ்சை கையால் சிறிது தூரம் தள்ளி விட்டு ‘ஸ்டார்ட்’ செய்யும் நிலை உள்ளது. இதனால் வளையப்பட்டி நாமக்கல்லுக்கு பணி நிமித்தமாகவும், பிற வேலைகளுக்காகவும் செல்பவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பஸ்சை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story