ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வெயிலின் தாக்கத்தை போக்க தரைவிரிப்புகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வெயிலின் தாக்கத்தை போக்க தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இக்கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலால் சிரமப்படாமல் இருக்க கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஏற்பாட்டின் பேரில் உபயதாரர்கள் உதவியுடன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. இதனை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர் பட்டர் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story