உலக மகளிர் தினம்


உலக மகளிர் தினம்
x

உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தென்காசி:

நெல்லை அருகே புதூரில் உள்ள செயின்ட் மரியம் காலேஜ் ஆப் இன்ஸ்டிடியூஷன் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. 

நெல்லை அரசு ஆஸ்பத்திரி முதல்நிலை செவிலியர் கண்காணிப்பாளர் திருமால்தாய் தலைமை தாங்கினார். கல்லூரி சேர்மன் தம்பி குட்டி, நிர்வாகிகள் விபின் தம்பி, வினித் தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்மசி கல்லூரியின் பேராசிரியை அமுதா ஐஸ்வர்யா தேவி வரவேற்றார். 

நெல்லை அரசு ஆஸ்பத்திரி இரண்டாம் நிலை செவிலியர் கண்காணிப்பாளர்கள் பிச்சை வடிவு, மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

செவிலியர் கல்லூரி முதல்வர் பிளாட்டினா செல்வரத்தினா உள்பட பலர் பேசினார்கள். கல்லூரி மாணவ- மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் பானுமதி நன்றி கூறினார்.

Next Story