ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானை


ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த யானை
x
தினத்தந்தி 10 March 2021 3:09 AM IST (Updated: 10 March 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே வாகனங்களை யானை வழிமறித்தது

தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி ஆசனூரில் உள்ள தமிழக- கர்நாடக தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.  
இந்த நிலையில் ஆசனூரை அடுத்த காரப்பள்ளம் அருகே ஒற்றை ஆண் யானை அங்குள்ள சாலையில் அங்கும் இங்குமாக உலா வந்தது. பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்களை யானை வழிமறித்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘ரோட்டோரமாக ஒற்றை யானை சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story